Master : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை சேவியர் பிரீட்டோ தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்த நிலையில் படத்தை ஏப்ரல் 9ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் நாடு முழுவதும் வைரஸ் தாக்கம் அதிகமாகி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனால் குறித்த தேதியில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் ரத்தினகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா மட்டும் பரவாமல் இருந்தால் இந்நேரம் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்திருக்கும் படப்பிடிப்பின்போது டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு, அதை அடுத்து போராட்டம், வருமான வரித்துறையினர் சோதனை இப்பொழுது இந்த சூழ்நிலை ஒரு ரசிகனாக மிகவும் வருத்தமாக இருக்கிறது எங்களிடம் கடைசிவரை சிரிப்பு இருக்கும் வாழ்வது தான் முதலில் அடுத்ததுதான் கொண்டாட்டம் என பதிவிட்டுள்ளார்.
#Master would have released by now if #CoronaOutbreak didn't happen. Can see lot of sad tweets, As a fan it hurts big. Pollution, Protests, Raid & now this. Anyway we will have the last laugh??.
Survival First?
Celebrations Later ??
Suddenly this selfie looks Nostalgic?? pic.twitter.com/bBRqjBRePI— Rathna kumar (@MrRathna) April 8, 2020