தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய்சேதுபதி இதற்கும் முன்பு பேட்டை படத்தில் ரஜினிக்கு வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுபோலவே மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வில்லனாக அவர் நடிக்க இருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடக்கிறது. இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 14 காதலர் தினம் அன்று இப்படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட்டை அறிவிக்க அப்படக்குழு தெரிவிக்க தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் இப்பொழுது அவர் வில்லனாக நடித்து வருகிறார்.
அவர் மேலும் கூறியது நான் ஹீரோவாக மட்டும் நான் நடிப்பதில்லை. இதுபோன்று கதாபாத்திரத்தில் வலிமை இருந்தால் அந்த கதையில் நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன் என ஊடகங்கள் மத்தியில் அவர் தெரிவித்தார்.
நான் வில்லனாக நடிக்க விட்டால் மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தை நான் தவறவிட்டு இருப்பேன் என விஜய் ரசிகர் மத்தியில் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் அஜீத் படத்திலும் இதுபோல நடிக்க வாய்ப்பு அமைந்தால் நான் நடிப்பேன் என ஊடகங்கள் மத்தியில் கூறினார். இதனால் தல தளபதி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.