விஜய்யின் எந்த ஒரு திரைப்படத்திலும் இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்.! மாஸ்டர் உண்மையை உடைத்த இயக்குனர்.!

master 1-vijay-tamil360newz
master 1-vijay-tamil360newz

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார், இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.

விஜய்யின் திரைப்படம் பாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், விஜய்யின் இந்த திரைப்படத்திற்கு ரத்தினகுமார் தான் திரைக்கதை அமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் பற்றிதான் ரத்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இந்த பேட்டியில் மாஸ்டர் படத்தை பார்க்கும் பொழுது விஜய்யின் எந்தவொரு திரைப்படத்திலும் இப்படி பார்த்து இருக்க மாட்டீர்கள், மேலும் இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை அமைப்பது மிகவும் சவாலாக இருந்தது எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.