விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ்க்கு இத்தனை கோடி சம்பளமா.?

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுத்து வருபவர் இவர் முதன்முதலில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இந்த திரைப்படம் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்திக் நடிப்பில் வெளியாகிய கைதி என்ற திரைப்படத்தை இயக்கி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

கைதி திரைப்படம் கார்த்தி திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது, நீண்ட காலமாக ஹிட் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்த கார்த்திக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது, ஆனால் கைதி திரைப்படத்தில் நடிகைகள் கிடையாது பாடல் கிடையாது ஆனாலும் இந்த திரைப்படம் மெகா ஹிட்டானது.

கைதி திரைப்படம் வசூல் ரீதியாக 100 கோடி வரை வசூலித்தது, அதனால் கார்த்திக் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது, இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் முன்னணி நடிகரும் வசூல் மன்னனும் ஆகிய விஜயை வைத்து மாஸ்டர்  திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது, ஆனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்து வருவதால் திரையரங்குகள் மூடி வைக்கப்பட்டுள்ளது, அதனால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 3 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.