மாஸ்டரில் கதிகலங்க விட்ட குட்டி பவானி.. நீங்கதான் நடிக்கணும் என வலுக்கட்டாயமாக கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்.!

master
master

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும்  வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது சொல்லப்போனால் பாலிவுட் படங்களுக்கு நிகராக வசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு பிரமாண்டமாக திரையரங்கில் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் முடிவடைந்த நிலையில் ஆறு மாதங்களாக கொரனோ பிரச்சினை காரணமாக ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் இருந்தது.

அதன்பிறகு மிகவும் தைரியமாக என்ன நடந்தாலும் நடக்கட்டும் என திரையரங்கில் ரிலீஸ் செய்தார்கள். இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய்சேதுபதி ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன்,  மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

master
master

படத்தில் ஜேடி கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதி மிரட்டல் வில்லனாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். விஜய்சேதுபதிக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

மாஸ்டர் மகேந்திரன் சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார் ஆனால் இளமை காலங்களில் அவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் தொடர்ந்து சினிமாவில் இருந்து புறக்கணிக்கப்பட்டார் லோகேஷ் கனகராஜ் கூப்பிட்டு மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் மாஸ்டர் மகேந்திரன் அவர்களுக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு குவிந்து வருகிறது மேலும் மகேந்திரன் தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் தனுஷ் 43 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மாஸ்டர் மகேந்திரன் கமிட்டாகி உள்ளாராம்.

அதற்கான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதேபோல் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.