தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்ட நபர்களில் முதன்மையானவராக விளங்குபவர் தளபதி விஜய். விஜய் அவர்கள் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அத்தகைய படங்களில் மிக பெரிய வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்து மிக பெரிய சாதனை படைத்தது இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனராஜ்யுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைபடத்தில் நடித்து முடித்துள்ளார் இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் ரிலீஸ் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படக்குழு தற்போது வேலை ஆரம்பிக்க தொடங்கி உள்ளனர் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் எகிறி உள்ளது. தற்போது அரசு போஸ்ட் புரமோஷன் பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளார்கள் இதனை அடுத்து மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது.
இந்த நிலையில் மாஸ்டர் கதை எழுதும் பணியில் உதவியாக இருந்த எழுத்தாளர் பார்த்திபன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தின் கதை ஒரு உண்மை கதை அந்த நபரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை லோகேஷ்க்கு மாஸ்டர் படமெடுக்க தோன்றியது எனக் கூறினார்.அத்தகைய செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.