மாஸ்டர் முதல் காட்சி டிக்கெட்டை என்னிடம் யாரும் கேட்க வேண்டாம்.! பிரபலம் ஒரே போடு.!

master
master

Master movie : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தளபதி விஜய் தளபதி விஜயின் திரைப்படம் பாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலிஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சஞ்சீவ் சாந்தனு பாக்கியராஜ், மகேந்திரன் என பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தை சமீபத்தில் OTT இணையதளத்தில் வெளியிடப் போகிறார்கள் என தகவல் வெளியான நிலையில் படக்குழு படத்தை கண்டிப்பாக திரையரங்கில் தான் ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக உறுதிஅளித்திருந்தது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானால் மட்டுமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் எனவும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திரையரங்கு பார்வையாளர்கள் தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாஸ்டர் போன்ற திரைப்படம் திரையரங்கில்  வெளியானால் பார்வையாளர்களை வரவழைக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யின் பிகில் திரைப்படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் 2021 ஆம் ஆண்டில் மாஸ்டர் படத்தை எங்களுடைய ஏஜிஎஸ் சினிமாவில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் மாஸ்டர் திரைப்படம் OTT தான் வரும் என போலி செய்திகளை பரப்பி வருபவர்கள் என்னிடம் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் முதல் காட்சிக்கான டிக்கெட்டை கேட்க வேண்டாம் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் மாஸ்டர் திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகளை  பார்த்து அர்ச்சனா அந்த திரைப்படம் திரையரங்கில் வந்தால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி உங்களுக்கு எப்படி என்று நடிகை ராதிகாவும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.