தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு நடிகர்கள் தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வில்லை என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் மட்டுமே அந்தப் படத்தில் முழுக்க முழுக்க ரசிக்கும்படி அமைந்தது எனவும் ரசிகர்கள் கூறுகிறார்கள். அதிலும் சில நடுதறப்பு ரசிகர்கள் விஜய்யை விட விஜய் சேதுபதி நடிப்புதான் படத்தில் பக்காவாக இருந்தது எனவும் கூறுகிறார்கள்.
அந்தளவு வில்லனாக நடித்து விஜய்சேதுபதி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். பெரிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி கூட மாஸ்டர் திரைப்படத்தை பற்றி பேட்டிகளில் பேசியதே கிடையாது ஆனால் அந்த படத்தில் நடித்த நண்டு சிண்டு என பலரும் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி யூடியூப் சேனலுக்கு போய் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட காட்சிகள் அமையவில்லை என்பதுதான் உண்மை அதிலும் குறிப்பாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் டிவி தீனா, சாந்தனு, யூடியப் பவி டீச்சர், 96 கௌரி கிஷன் ஆகியோர்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தில் பெரிதாக கதாபாத்திரம் இல்லை என்பதும் உண்மை தான் இருந்தாலும் ரசிகர் ஒருவர் நேரடியாக சாந்தனுவை சமூகவலைதளத்தில் வம்பு இழுத்துள்ளார்.
அந்த ரசிகர் கூறியதாவது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் கையில் வரும் பூனை அளவிற்கு கூட சாந்தனு பாக்கியராஜ் அவர்களுக்கு படத்தின் காட்சிகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார் அதற்கு சாந்தனு பாக்கியராஜ் தன்னை கிண்டல் செய்த ரசிகர்களை சமாளிக்க ஒரு காட்சியோ ஒரு படமும் அதுவே ஒரு சாதனைதான் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரும் சாந்தனு பாக்கியராஜ் வாரிசு நடிகராக இருந்தாலும் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இன்னும் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் என்பதுதான் உண்மை.
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தபிறகாவது அவரின் வாழ்க்கை மாறுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் சில ரசிகர்கள் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்ததை தான் யாராலும் மன்னிக்க முடியாது என மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.