வசூல் 2 கோடி தான் ஆனால் 20 கோடின்னு கணக்கு காட்டுவாங்க.! மாஸ்டர் படத்தை பங்கமாய் கலாய்த்த அமைச்சர்.! ரசிகர்கள் அதிர்ப்த்தி

Master
Master

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு ஒரு சில ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் படத்தை பார்த்த பலரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் பிரமிக்க வைத்துள்ளது என கூறினார்கள். மாஸ்டர் திரைப்படம் வெளியான அடுத்த ஷோ முதல் பல ட்ராக்கர்ஸ் இந்த திரைப்படத்தின் வசூல் தங்களின் கைக்கு வந்த நிலையில் வசூல் விவரங்களை ஏற்றி சொல்வதாக அமைச்சர் பாண்டியராஜன் கிண்டலா சமூக வலைத்தளத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதுவும் பொதுவாக நமது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் விவரங்கள் அவர்களுக்கு பிடித்த நம்பர் ஒன்றை சமூக வலைதளங்களில் போட்டுக் கொள்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதனால் உண்மையான வசூல் நிலவரம் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

master
master

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் பற்றி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன் தங்களது படம் வெற்றி பெற்று விட்டது என்று காட்டுவதற்காக 2 கோடி வசூல் செய்ததை 20 கோடி வசூல் ஆனதாக கணக்கு காட்டுவார்கள் என வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.