மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தன்னை ஒரு பேராசிரியர் படுக்கைக்கு அழைத்தது குறித்து அதிரடி கருத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதனால் புதுப்புது சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அதேபோல் தொலைக் காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள்டையே மிக வேகமாக பிரபலமாகி விடுகிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சௌந்தர்யா. இவர் சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் இவர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியராகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக கேள்வி எழுப்பியுள்ளார் அதிலும் படுக்கைக்கு வந்தால் எவ்வளவு உனக்கு என்று கேட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மாஸ்டர் நடிகையும் செம டென்ஷன்னாக பேராசிரியருக்கு சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது மதுரையில் உள்ள பேராசிரியர் என்ற இவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் உள்ளது இவருடைய கல்லூரியில் படிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் எதற்கும் இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என நச்சென்று ஒரு பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்தப் பேராசிரியருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.