பொங்கல் தினத்தன்று கடந்த 13ஆம் தேதி முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது.
மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை குறித்து லோகேஷ் கனராஜ் கூட மாஸ்டர் திரைப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் சிறிய வேடத்தில் சுரேகா வாணி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படத்திலிருந்து அவர் நடித்திருந்த காட்சி நீக்கப்பட்டது.
ஆனால் அந்த காட்சி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் நடிகை சுரேகா வாணி தனது டுவிட்டரில் தளபதி விஜயின் சிறந்த ஆக்சன் படங்கள் எனக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று பதிவிட்டுருந்தார்.
இதனை பார்த்த தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கிடையே பெரும் போர் நடைபெற்று வருகிறது. சுறா,புலி, பைரவா என தல ரசிகர்கள் கூற அதற்கு தளபதி ரசிகர்கள் ஆஞ்சநேயா,அசல் படங்களை போய் பாருங்க என்று சண்டை போட்டு வருகிறார்கள்.
ஒரு ரசிகர் மட்டும் சுரேகா வாணியை உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? நீங்கள் பிரபலம் அடைவதற்காக இதை கேட்க வேண்டியது.. ஏன் நீங்கள் வேற்று கிரககாறரா? ஒண்ணுமே தெரியாதா உங்களுக்கு? என்று கூறி சுரேகா வாணியை கண்டபடி திட்டி வருகிறார்.
Suggest me some action films of @actorvijay Sir 😊💥❤️
— Surekhavani (@SurekhaVaniOffl) February 15, 2021