சினிமாவைப் பொருத்தவரை வாய்ப்புகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான் ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நடிகர் மற்றும் நடிகைகள் என்று பார்த்தால் குறைவுதான். அதிலும் ஒருசில நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலும் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.
அப்படிதான் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கௌரி கிஷன் இவர் 96 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். அந்த திரைப்படத்தில் இவர் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரச்கர்களை வெகுவாக கவர்ந்தார்.
சிறுவயது த்ரிஷா வாக பள்ளிப் பருவ மங்கையாக நடித்து பிரபலமடைந்தவர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை தட்டிச் சென்றார்.
அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இவர் நடித்த கதாபாத்திரம் மாஸ்டர் திரைப்படத்தில் மிகமிக முக்கிய கதாபாத்திரமாக அமைந்துவிட்டது.
அதேபோல் தனுஷின் கர்ணன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்பை தட்டி செல்லும் கௌரி கிஷன் சமூகவலைதளத்தில் தங்களுடைய ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அடிக்கடி சமூகவலைதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு தனது முகத்தை ரசிகர்கள் மறந்து விடாமல் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது குட்டையான உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்க்க பச்ச மண்ணு மாதிரி இருந்துகிட்டு இதுபோல் உடை தேவையா என அறிவுரை கூறி வருகிறார்கள்.