master mahendiran photo viral:தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிட போவதாக படக்குழுவினர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டது டீசர் வந்த முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த டீசரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன்.
ரசிகர்கள் பலரும் அந்த டீசரில் இவரை தேடினார்கள் பின்பு இவர் இருந்ததை பார்த்து ரசித்தார்கள்.
இந்நிலையில் மகேந்திரன் சமீபகாலமாகவே தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கமாக வைத்து வருகிறார் என்று பல செய்திகள் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது.
இதனையடுத்து மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாய்களுக்கு உணவு அளிப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.