தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக திரைக்கு வந்துள்ளது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மாஸ்டர் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது அதனால் படத்தின் ஒவ்வொரு ப்ரோமோ வெளியாகும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோல் படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது திருப்தி படுத்தியது.
மாஸ்டர் திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது, கொரோனா காலகட்டத்தில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது, அதுவும் குறிப்பாக சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுடன் தான் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.
மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை மேலும் இந்த திரைப்படம் முதல் நாள் சென்னையில் மட்டும் 1.21 கோடி வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்துள்ளார்கள். அதேபோல் தமிழகத்தில் இதுவரை வந்த தமிழ் திரைப்படங்களிலேயே முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் என கூறுகிறார்கள்.
இதன்மூலம் எப்படி பார்த்தாலும் முதல் நாள் வசூல் 22 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, கொரோனா காலகட்டத்தில் இப்படி ஒரு வசூல் நிகழ்த்தி சாதனை படைத்த பெருமை மாஸ்டர் திரைப்படத்திற்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.
மேலும் இனி வரும் நாட்கள் அனைத்தும் பண்டிகை நாள் விடுமுறை நாள் என்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.