சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோலில் என எந்த வாய்ப்புகள் வந்தாலும் அதை திறம்பட தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது மார்க்கெட் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கிறது.
இருப்பினும் வாய்ப்புகள் எங்கிருந்து வந்தாலும் அதில் நடிக்க ரெடியாக விஜய் சேதுபதி அண்மையில் கூட சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி சிறப்பாக முடித்து வைத்தார். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஹாலிவுட்டில் பிரபலமான டிவி சேனல்களில் ஓடிவந்த நிலையில் தற்போது தமிழில் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் என்ற பெயரில் தொகுத்து சன் டிவியில் வழங்கினார்.
இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இது 30 நாட்கள் இந்த போட்டியில் நடந்தது. முதல்10 பேர் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேற கடைசியாக நான்கு பெயர்கள் இறுதி போட்டியில் பங்கு பெற்றனர். கடைசியாக தேவகி விஜயராமன் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.
அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது மேலும் அவருக்கு கடைசியாக 25 லட்சம் பணம் கொடுத்து அசத்தியது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீண்டும் இரண்டாவது சீசனில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் சீசன்னுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு கிடைத்தாலே இரண்டாவது சீசனை தொடங்க ஒரு வருடங்களோ அல்லது பல மாதங்கள் ஆகும்.
ஆனால் ஆனால் சன்டிவி மாஸ்டர் செஃப் இரண்டாம் பாகத்தை வெகுவிரைவிலேயே நடத்த முடிவு எடுத்துள்ளது மேலும் தற்போது ஆடிஷன் வைத்து போட்டியாளர்களை எடுக்க முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியாகி உள்ளது.