விஷால் 31 படத்தில் இணைந்த மாஸ்டர் பிரபலம்.!

vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிகரையும் தாண்டிய தற்பொழுது சில படங்களை இயக்கியும் வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் துப்பறிவாளன் 2 மற்றும் எனிமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.எனிமி திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடித்து வருகிறார்.

விஷாலுக்கு ஜோடியாக டிக்டாக் மிருணாளினி நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது எனவே விஷால் தனது அடுத்த திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் தனது 31வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் குள்ளநரி கூட்டம் பட இயக்குனர், பாலாஜி தேன் பட இயக்குனர் போன்றவர்களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அந்தவகையில் து.ப.சரவணன் இயக்க உள்ள விஷாலின் 31-வது திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரவீனா ரவி தற்போது இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இவர் ஒரு டப்பிங் கலைஞர் ஆவார் இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இவர் தான் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகை மாளவிகாவிற்கு டப்பிங் கொடுத்திருந்தார்.  இவரைத் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக பிரபல நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.