இணையதளத்தில் லீக் ஆன மாஸ்டர் பைக் ஸ்டாண்ட் காட்சி.? வைரலாகும் வீடியோ

master
master

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், மேலும் படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமாரும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது, ஏனென்றால் மாஸ்டர் திரை படத்தில் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா கௌரி கிஷன் சாந்தனு என பல முக்கிய பிரபலங்கள் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் படத்தில் பைக் சேசிங் காட்சி ஒன்று இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் கூறியிருந்தார், இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் மாசான பைக் சேஸிங் காட்சி ஒன்றை எடுக்கும் படப்பிடிப்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ மாஸ்டர் திரைப்படத்தில் உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது இது மாஸ்டர் திரைப்படத்தின் வீடியோ இல்லை என அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.