மாஸ்டர் இசை வெளியிட்டு விழாவில் “குட்டி ஸ்டோரி” விஜயின் அசத்தலான பேச்சு.! வைரலாகும் வீடியோ

Master-song-Vaathi
Master-song-Vaathi

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது, இசை வெளியீட்டு விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விஜய் ஏதாவது குட்டி ஸ்டோரி சொல்வார் என்று தான், அதேபோல் நேற்று இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டி ஸ்டோரிஸ் கூறினார். அரங்கமே கைதட்டியது.

அதில் அவர்கள் கூறியதாவது அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் உள்ள பாடலான எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலில் இருந்து நதிபோல ஓடிக்கொண்டிரு என வார்த்தை வரும், அதைதான் விஜய குட்டி ஸ்டோரியாக கூறினார்.

அதாவது நாம் நதியாக இருப்போம் அதில் சிலர் ஒன்று கூடி விளக்கை ஏற்றி நதிகளை அனுப்புவார்கள் சிலர் அதில் மலர்களை தூவி வரவேற்பார்கள், அந்த நதியில் நமக்குப் பிடிக்காதவர்கள் கற்களை எறிவார்கள் அதனால் நம் நதியைப் போல் இருப்போம் நம் கடமையை செய்வோம் எனக் கூறினார் விஜய்.