தன்னை உருகி உருகி காதலித்து விட்டு பின்பு கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்துள்ள மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலம் மீது இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் ,விக்ரம் என நான்கு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய் அவர்களை வைத்து தளபதி 67 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளார்கள் பட குழு.
மேலும் லோகேஷ் நாகராஜ் இதற்கு முன்பு மாஸ்டர் என்ற திரைப்படத்தில் விஜய்யை வைத்து இயக்கியுள்ளார் அந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் இணை இயக்குனராகவும் அவரது திரைப்படங்களுக்கு பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் விஷ்ணு இடவன்.
இவர் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பொளக்கட்டும் பரபர விக்ரம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள போர் கண்ட சிங்கம் மற்றும் நாயகன் மீண்டும் வரான் ஆகிய பாடல்களை எழுதியவரும் இவர்தான்.
இப்படி விஷ்ணு இடவன் அவர்களுக்கு அடுத்தடுத்த பாடல்கள் ஹிட் ஆவதால் இவருக்கு அடுத்தடுத்த பாடலை எழுதும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கவின் நடிப்பில் வெளியாகிய டாடா திரைப்படத்திலும் விஷ்ணு இடவான் பாடலை எழுதியுள்ளார் இப்படி சினிமாவில் அடுத்தடுத்து கட்டத்தை நோக்கி பயணிக்கும் இவர் தற்பொழுது சர்ச்சையிலும் சிக்கி உள்ளார்.
அந்த வகையில் இளம் பெண் ஒருவர் விஷ்ணு இடவன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் அதாவது அந்த புகாரில் அந்தப் பெண் நானும் அவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் அதனால் கர்ப்பமானதாகவும் இரு வீட்டார் சம்பந்தத்துடன் கலந்து பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்கள் ஆனால் விஷ்ணு இடவன் தற்பொழுது அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பகீர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இது சினிமா பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.