தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா, இவர் திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் பின்பு மீண்டும் சினிமாவில் ரீ எட்ன்றி கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார், இந்த நிலையில் சில நாட்களாகவே ஜோதிகாவின் பேச்சுதான் சமூக வலைதளம் முழுவதும் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் திரைப்படம் 4.5 கோடிக்கு உருவாக்கப்பட்டது இந்த திரைப்படத்தை 9 கோடி வரை ஆன்லைன் வர்த்தகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த சிறிய திரைப்படம் மட்டுமே பாதிக்கு பாதி வியாபாரம் நடந்துள்ளதால் பெரிய திரைப்படங்களின் நிலைமையை சொல்லவா வேண்டும்.
அதேபோல் இன்னும் சில திரைப்படங்கள் சில கட்டுப்பாடுகளுடன் வெளியாக இருக்கிறது, இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இனி வரும் பல திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியிட பெரும் முயற்சி செய்து வருகிறார்கள், அதனால் பல திரையரங்குகள் மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இப்படி சிறு சிறு திரைப்படங்கள் ஆன்லைனில் வாங்கி வெளியிட்டால் கண்டிப்பாக செலவு செய்த பணம் திருப்பி கிடைத்துவிடும் இதனால் தமிழ் சினிமா விரைவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும், இதனை தொடர்ந்து ஜோதிகாவின் பொன்மகள் படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு 135 கோடியும் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 60 கோடி விலை வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அப்படி மட்டும் விஜய் மற்றும் சூர்யா திரைப்படங்கள் ஆன்லைனுக்கு வந்தால் திரையரங்கங்கள் நிலைமை மிகவும் மோசமாகி விடும், பிறகு பல நடிகர்களின் திரைப்படம் ஆன்லைனில் தான் ரிலீஸ் ஆகும், அதனால் திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்கில் வேலை செய்யும் தொழிலாளிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள், அதனால் இந்த லாக்டவுன் முடிவதற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.
அதேபோல் திரையரங்கில் 3d திரைப்படத்தை திரையிட வேண்டும் என்ற நிலைமை மாறி விடும், அப்படி 3டி திரைப்படத்தை திரையிட வேண்டுமென்றால் சில சிறிய தியேட்டர்கள் மிகவும் பாதிக்கப்படும், அதேபோல் அனைத்து ஸ்கிரீன் களையும் 3டியில் மாற்றவேண்டும் என்றால் செலவு செய்ய வேண்டும் அதனால் திரையரங்க உரிமையாளர்கள் கொஞ்சம் பாதிக்கப்படுவார்கள்.
தயாரிப்பாளர்கள் கடன் வாங்கிதான் படங்களை எடுத்துள்ளார் இப்படியே ரிலீசாகாமல் படங்கள் தள்ளிப் போனால் அவர்கள் வாங்கிய கடன் வட்டி குட்டி போட்டு விடும் அதனால் அவர்கள் பெரும் தலைவலியை சந்திப்பார்கள், அதனால் தான் சிறு சிறு தயாரிப்பாளர்கள் படத்தை ஆன்லைனில் வெளியிட முன்வருகிறார்கள், இந்த நேரத்தில் அவர்கள் ரிலீஸ் செய்யவில்லை என்றால் தயாரிப்பாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.