அமைதி என்ற பெயரில் புகைப்படத்தை வெளியிட்டு பூகம்பத்தை உண்டாக்கிய மாஸ்டர் மாளவிகா.! உங்க கிட்ட இத எதிர்ப்பார்க்கல என கூறும் ரசிகர்கள்.!

malavika-mohanan

நடிகை மாளவிகா மோகனன் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட என்ற திரைப்படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானர் இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி திரைப்படம் என்பதால் இவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் முன்னணி நடிகரான விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று OTT இணையதளம் அல்லது திரையரங்கில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில்.

மாஸ்டர் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக திரையரங்கில் தான் ரிலீசாகும் என கூறியுள்ளார்கள்,இதன் நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அடுத்தடுத்து திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மாளவிகா வெப் தொடர் ஒன்றிலும் பாலிவுட் ஆக்சன் திரைப்படத்திலும் நடித்துவரும் இந்தநிலையில் தனுஷுடன் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தநிலையில் மாளவிகா மோகனன் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.  அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தவர்.

malavika mohanan
malavika mohanan

அப்படி இருக்கும் வகையில் திடீரென மாளவிகா மோகனன் அமைதியாக உட்கார்ந்து யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக மனம் அமைதியாக இருக்கும் பொழுது எவ்வளவு விரைவாக, எவ்வளவு சீராக, எவ்வளவு அழகாக நீங்கள் எல்லாவற்றையும் உணர்வீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமைதியோ அமைதி உங்களிடம் இப்படி ஒரு அமைதியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கமெண்ட் அளித்துள்ளார்கள்.

malavika mohanan