mastar movie unseen image: தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இத்திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி கண்டது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதன் காரணமாக திரையரங்கில் வெறும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப் பட்டது என்னதான் பாதை ரசிகர்கள் திரையரங்கில் வந்து படம் பார்த்தாலும் மறக்க முடியாத அளவிற்கு வசூலையும் வெற்றியையும் இந்த திரைப்படம் கொடுத்துவிட்டது.
இவ்வாறு தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய்யின் பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வந்தார்கள் அந்த வகையில் அனைவரும் அவர்களுக்கு பிடித்த தளபதியின் புகைப்படங்களை வைத்து வாழ்த்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் ஒரு சிலர் வீடியோக்கள் unseen காட்சிகள் என இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த ரம்யா மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தளபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட காட்சியானது இதுவரை மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெறவே இல்லை அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை மாளவிகா மோகனன் ஒரு நாள் முழுக்க இந்த பஸ்சில் எடுக்கப்பட்ட காட்சி நம்மால் மறக்கவே முடியாது என டைப் செய்து உள்ளார்.