சம்பளப் பாக்கியை கேட்ட ஒரே காரணத்தினால் மாஸ்டர் படத்தில் நடிக்க விடாமல் செய்து விட்டார்கள் என புலம்பும் நடிகர்..!

kaththi-

mastar movie chance missing actor: தமிழ் சினிமாவில் கடந்த 2014ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் கத்தி. இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக போற்றப்படும் தளபதி விஜய் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் கதாநாயகியாக பிரபல நடிகை சமந்தா நடித்துள்ளார் இத்திரைப்படம் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு இரண்டாவது முறையாக 100 கோடி வசூல் கொடுத்த திரைப்படம் என்றால் அது இந்த திரைப்படம் தான்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர்  அவருடைய சம்பள பாக்கியை கேட்டதன் காரணமாக அவரை மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க விடாமல் ஒரு குழு வேலை செய்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த நடிகர் கத்தி திரைப்படத்தில் விவசாயிகளின் புகாரை நீதிபதியின் தரப்பிலிருந்து விசாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது பிரபல முன்னாள் நடிகர் கண்ணதாசனின் கோபி கண்ணதாசன் தான்.

இவர் விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இவர் கத்தி திரைப்படத்தில் நடிக்க அழைத்த பொழுது இவருக்கு ஒரு தொகையை தருவதாக கூறி நடிக்க வைத்தார்களாம் ஆனால் பிறகு பாதி பணத்தை மட்டும் கொடுத்து விட்டு மொத்தத்தையும் கொடுத்து விட்டோம் என கூறி அனுப்பி விட்டார்களாம்.

இதுகுறித்து லைக்கா நிறுவனத்திடம் அவர் கேட்டபோது  பணம் முழுவதையும் கொடுத்துவிட்டோம் உங்களை  அழைத்தவரை நேரில் சென்று விசாரித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களும் அனுப்பி விட்டார்களாம்.

பின்னர் தான் மாஸ்டர் திரை படத்தில் நடிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு விருது கிடைத்தது ஆனால் அப்போது லைகா நிறுவனம் திரிஷாவின்  படம் போன்ற வெளிநாட்டில் எடுக்கப்போவதாக கூறியதன் காரணமாக அவர் அங்கு திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஆனால் திடீரென அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தள்ளி போட்டு விட்டார்கள்.

gobi
gobi

அதன் பிறகுதான் தெரிந்தது பாக்கி பணத்தை கேட்டதன் காரணமாக தான் என்னை பழிவாங்கி விட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.