வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்வதற்காக போராடி வரும் நடிகைகளில் ஒருவர்தான் நிதி அகர்வால் இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் என்ற திரைப்படத்திலும் சிம்புக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார் அந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் மட்டும்மல்லாமல் நிதி அகர்வால் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகி என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பில் நிதி அகர்வால் கலந்து கொண்டுள்ள போது அங்குள்ள ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்து விட்டார்கள் அப்போது அவர் நடக்க முடியாமல் காவல்துறையினர் பாதுகாப்புடன் பத்திரமாக கேரவனுக்கு சென்றார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ காணொளி.
Huge fan craze for young actress @AgerwalNidhhi at her recent shoot in Rajahmundry. Wow!
She'll be seen soon in Tamil biggies #Bhoomi, #Eeswaran pic.twitter.com/xQOlu3Msa0
— Kaushik LM (@LMKMovieManiac) December 19, 2020