சினிமாவில் பிரபலமான பலர் தங்களது வாரிசுகளை புதிதாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதி எளிதில் பிரபலமடைய செய்வார்கள் அந்தவகையில் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகரான விக்ரம் தனது மகன் துருவை அறிமுகப்படுத்தினார்.
ஆதித்ய வர்மா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பிற மொழியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.தற்போது உள்ள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது விக்ரம் நடிக்கும் விக்ரம் 60 படத்தில் தனது அப்பாவுடன் இணைந்து நடித்து வருகிறார் துரு.விக்ரம் 60வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
இதனைத் தொடர்ந்து விக்ரம் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருவதால் தற்போது அந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். எனவே படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்ததும் விக்ரம் 60 படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் விக்ரம், துரு விக்ரம் மற்றும் சிம்ரன், பாபி சிம்ஹா போன்ற பிரபலங்கள் இப்படத்திற்கு நடிக்க கமிட்டாகி உள்ளார்கள். இப்படத்தை பற்றிய பல அப்டேட்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் புதியதாக வாணிபோஜன் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என்று சரியாக தெரியவில்லை ஆனால் ரசிகர்களோ இவர் துரு விக்ரமுக்கு ஜோடியாக நடித்தால் சூப்பராக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.