தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் பயங்கரமாக விமானத்தில் உருவாகும் ஸ்டண்ட் காட்சி.! ‘சூர்யா 42’ படத்தின் மாஸ் அப்டேட்..

surya-42
surya-42

நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 42வது திரைப்படத்தின் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என பெயர் வைத்துள்ளனர் இந்நிலையில் தொடர்ந்து சூரியன் 42 படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே இந்த படத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான விமான சேட்டு ஒன்று போடப்பட்டுள்ளது அதில் அதிரடியாக உருவாக இருக்கும் ஸ்டாண்ட் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது குறித்த தகவல்களை தேடும் பொழுது இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் இதுவரையிலும் தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும் எனக் கூற ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சூர்யா வில்லனாக நடித்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்த நிலையில் அதைவிட சூரியன் 42வது திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

suirya-42

இதுவரையிலும் இந்த படத்திற்கு டைட்டில் வைக்காமல் இருந்து வரும் நிலையில் மிகவும் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அடுத்தடுத்து சூரியன் 42 படத்தின் அப்டேட் வெளிவரும் எனவும் படக்குழுவினர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா பவானி நடித்து வரும் நிலையில் தமிழ், ஹிந்தி என 13 மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது.

இதனை அடுத்து இந்த படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் செய்யப்படும் எனவும் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்ட பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் படக்குழுவினர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.