தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் செல்வராகவன் இவர் தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் அப்படி இவர் நடிப்பில் வெளியான சாணி காயிதம் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு அண்ணனாக நடித்து மிரட்டி இருப்பார்.
இதேபோல் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி உள்ளார் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது பகாசுரன் என்ற திரைப்படத்தில் செல்வராகவன் அவர்கள் நடித்து வருகிறார்.
இயக்குனர் மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் நடித்து வரும் பகாசுரன் படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பற்றி வருகிறது.
இந்த நிலையில் செல்வா ராகவன் நடித்து வரும் பாகாசுரன் படத்தின் அடுத்த பாடல் திங்கள் கிழமை வெளியாகும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் அவர்கள் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் மன்சூர் அலிகான், ராதா ரவி, நட்டி நடராஜன், கூல் சுரேஷ், உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இது ஒரு புது முயற்சி படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர் மத்தில அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் மன்சூர் அலிகான் இந்த படத்தில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Kaathama lyric video from Monday.. #Bakasuran 🤩 @SamCSmusic @ProBhuvan @Mrtmusicoff @Gmfilmcorporat1 pic.twitter.com/Cg9Z4Q9GAJ
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 15, 2022