தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்த பாலா சூர்யாவிற்கு ஏற்ற போல் கதை அமையாததால் அவர் இந்த படத்தில் இருந்து முழுமையாக விலகுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வணங்கான் திரைப்படத்தை பாதியில் கைவிட்ட நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
வாடிவாசல் திரைப்படத்திற்கு முன்பு தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக கேரளாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
அங்கு 40 நாட்கள் தொடர்ந்து காட்சியை படமாக்க உள்ள நிலையில் அந்த 40 நாட்களும் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் சூரியன் 42 திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் 16 கேட்டபில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
40 நாட்கள் இரவு காட்சிகளும் சூர்யா 16 கெட்டப்புகளும் சூரியா 42 திரைப்படம் வேற லெவலில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சூர்யா 42 திரைப்படம் ஒரு வரலாற்று கதை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்த நிலையில் 40 நாட்கள் இரவு நேரத்தில் மட்டுமே காட்சிகள் எடுத்தால் வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது இதனால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.