2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கேஜிஎப். இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து படக்குழு KGF இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார்கள் இந்தத் திரைப்படத்தையும் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இதன் புரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் KGF இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்பே விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அதனால் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை நேற்று படக்குழு அறிவித்தது இந்த நிலையில் KGF டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பல சாதனைகளை நிகழ்த்தியது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் மீண்டும் கேஜிஎப் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது பீஸ்ட் அப்டேட்டுக்கு எதிராக.
அதாவது KGF 2 சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கொண்ட வைத்துள்ளது. KGF 2 திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் 168 நிமிடங்கள் ஓடும் வகையில் திரைப்படம் அமைந்துள்ளது. அதாவது இரண்டு மணி நேரம் நாற்பத்தி எட்டு நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் KGF இரண்டாம் பாகத்தில் கன்னட நடிகர் யாஷ் அவர்களுடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் ,மாளவிகா, அவினாஷ், அச்சு குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜி, ஜான் கொக்கேன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பீஸ்ட் மாற்றம் KGF 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.