சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி தான்.. இந்த தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.. இந்த நிகழ்ச்சியை சீசன் சீசன்னாக உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக நடத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலானது..
இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிக் பாஸ் 7 -வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பிக் பாஸ் 7 -வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கான பணிகளில் தான் தற்பொழுது விஜய் டிவி களம் இறங்கி இப்பொழுதே போட்டியாளர்களை மும்பரமாக தேர்வு செய்து வருகிறது பிக் பாஸ் 7 வது சீசனில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது கடந்த சீசனில் பொதுமக்கள் என்ற அடையாளத்தோடு இரண்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
அவ்வாறு வந்த தனலட்சுமி, ஷவின் இருவருமே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிக் பாஸ் சீசன் 7 -ல் பொதுமக்கள் என்ற அடையாளத்தோடு கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது இந்த சீசனும் மக்களை குஷிப்படுத்தும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. 7 வது சீசனில் விஜய் டிவியில் இருந்து எத்தனை பேர் வரப் போகிறார்கள்.
மாடல் அழகிகள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள், பொதுமக்கள் சார்பில் இறங்கும் போட்டியாளர்கள் என்பது வெகு விரைவிலேயே தெரிந்து விடும்.. இப்பவே பிக்பாஸ் 7 சீசன் எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த சீசனையும் உலகநாயகன் தொகுத்து வழங்கினால் இன்னமும் சீரும் சிறப்புமாக இருக்கும் என்பதே அனைவரும் எதிர்பாக இருக்கிறது.