சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் கெட்டப் இதுதானா.? புதிய ஹேர்ஸ்டைலில் மாஸ் லுக்

suriya-1
suriya-1

Mass look at the new hairstyle suriya : நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார், சினிமாவில் வாரிசு நடிகராக நுழைந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், சூர்யாவை ஆரம்ப காலத்தில் நடிப்பு நடனம் சரியாக இல்லை என்று பலரும் கிண்டல் கேலி செய்தார்கள்.

ஆனால் அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா தற்பொழுது முன்னணி நடிகராக வளம வருகிறார், இப்பொழுது சினிமாவில் நுழையும் இளம் நடிகர்கள் சூர்யாவை பார்த்து கற்றுக் கொள்ளலாம் என்று கூறும் அளவிற்கு சூரிய வளர்ந்து விட்டார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா தான் இயக்கி உள்ளார், இதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படி தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் சூர்யா சமீபகாலமாக மிகப்பெரிய ஹிட் கொடுப்பதற்காக தடுமாறி வருகிறார் அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படம் இவருக்கு கைகொடுக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் சூர்யாவின் செம ஸ்டைலான புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இதைப் பார்த்த பலரும் இது நம்ம சூர்யா தானா என்ற அளவிற்கு உற்றுப் பார்க்கும் படி அமைந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் சூர்யா கலர் ஹேர், தாடி என ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாஸ் லுக்கில் இருக்கிறார்.

suriya-new-look-tamil360newz
suriya-new-look-tamil360newz
suriya-new-look-tamil360newz
suriya-new-look-tamil360newz