நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹச். வினோத் உடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் துணிவு. இந்த படத்தை முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்துள்ளனர் அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் சூட்டிங் அனைத்தும் வெற்றி கரமாக முடிந்த நிலையில் பட குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு, ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆகிறது ஆனால் இன்னும் சரியான தேதியை பட குழு அறிவிக்கவில்லை இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தை..
தமிழகத்தில் மிகப் பிரம்மாண்டமாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவி நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் மற்ற இடங்களில் இன்னும் இந்த படத்தின் என்ட்ரி கூட வரவில்லை.. குறிப்பாக கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற இடங்களில் இன்னும் என்ட்ரி ஆகவில்லை என கூறப்படுகிறது வெளிநாட்டு உரிமையை வாங்க..
இன்னும் யாரும் இதுவரை முன் வரவில்லை என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் சினிமா விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை அஜித் தான் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் படம் பற்றிய சந்தேகங்கள் விநியோகஸ்தர்களுக்கு தீரும் எனவும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.