ராஜமௌலியின் அடுத்த படத்தில் மார்வெல் ஹீரோ..? யாருன்னு தெரிஞ்சா உங்களுக்கே தூக்கி வாரி போடும்..

rajamouli

அண்மை காலமாக தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் பல புதிய படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன அதுவும் சாதாரண வெற்றியை அல்ல ஒவ்வொரு திரைப்படமும் குறைந்தது 500 கோடி லாபம் பார்க்கிறது.. அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமா உலகில் பல படங்கள் வெளி வருகின்றன.

அதற்கு காரணம் எஸ். எஸ். ராஜமௌலி தான் இவர் பாகுபலி என்னும் படத்தை முதலில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார் அந்த படம் 500 கோடிக்கு மேல் லாபம் பெற்றது அதனை தொடர்ந்து பாகுபலி இரண்டாவது பாகம் வெளியானது அது ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளியது அண்மையில் ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய திரைப்படம் தான் RRR.

இந்த படமும் ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்த்தது.. இந்த படங்களை தொடர்ந்து எஸ் எஸ் ராஜமௌலி முதல் முறையாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு உடன் கைகோர்த்து ஒரு படத்தையும் பண்ண இருக்கிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக இருக்கும் அந்த படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களில் நடித்து வந்த தோர் என்னும் வைகிங் கடவுளாக நடித்து புகழ்பெற்ற கிரீஸ் ஹெம்ஸ்வொர்த்  இந்தியா மீது தனி பிரியம் கொண்டவர் தற்பொழுது இந்திய திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ராஜமௌலி -மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகிய வண்ணமே இருக்கிறது.. இதை எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை ஆனால் நடந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது.

thor
thor