தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமல் நடிப்பது மட்டுமல்லாமல் படங்கள் இயக்குவது, தயாரிப்பது என மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதுவும் சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் அவர்களுடைய இயக்கத்தில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.
அப்படிப்பட்ட இவருடைய கனவு திரைப்படம் தான் மருதநாயகம். 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், விஷ்ணுவர் தன், சத்யராஜ், நாசர், பசுபதி போன்ற ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
மேலும் முக்கியமாக இந்த படத்தின் படப்பிடிப்பை இங்கிலாந்து ராணியை வைத்து ஆரம்பித்தார் கமலஹாசன் இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பல வருடங்களாக இந்த படம் கிடப்பில் கிடந்து வரும் நிலையில் மீண்டும் இந்த படத்தினை எடுப்பதற்காக கமலஹாசன் அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கமல் அவர்கள் மரதநாயகம் திரைப்படம் விரைவில் தொடங்கும் என்று கூறியிருந்தார். அதற்கான பணிகளும் தற்பொழுது நடந்து வருவதாகவும் ஆனால் இதில் கமல் அவர்கள் நடிக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. எனவே இதற்காக இந்த படத்தினை இயக்குவதற்கான பொறுப்பை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளாராம்.
எனவே இந்த படத்தில் கமலஹாசன் அவர்களுக்கு பதிலாக சூரியா அல்லது விக்ரம் ஹீரோவாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் எந்தெந்த திரை பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.