நாலு மாசம் தான் திருமணம் ஆகி ஆகுது அதற்குள் இரட்டை குழந்தையா . ? வறுத் தெடுக்கும் ரசிகர்கள்…

nayanthara
nayanthara

தமிழ் சினிமா நட்சத்திரமாக விளங்குபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் இவருக்கும் ஏராளமானவர் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தனது நடிப்புத் திறமையால் பல ரசிகர்களை கட்டி போட்டு உள்ளார்.

இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் கமிட் ஆகியும் உள்ளார்.

ஆனால் தற்போது நயன்தாரா அவர்கள் புது படங்களில் நடிக்கப் போவதில்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கடந்த ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா சென்னையில் ஒரு பிரம்மாண்டம் ஹோட்டலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களை வாழ்த்தும் விதமாக பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லை என பயில்வான் ரங்கநாதன் ஒரு youtube சேனலில் கூறியிருந்தார்.

அதற்கு ஏற்றார் போல தற்போது நடிகையின் நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் தானே ஆகிறது அதற்குள்ள எப்படி தாயானீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.