“வலிமை” பட வில்லன் கார்த்திக்கேயாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

karthikeya

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் கார்த்திகேயா இவர் சினிமாவில் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் நானி நடித்த ஒரு படத்தில் இவர் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் என்பது குறிபிடத்தக்கது.

தற்போது கூட இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் தமிழில் முதல்முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுவும் அஜித்துக்கு வில்லனாக இவர் நடித்துள்ளதால் படம் வெளிவருவதற்கு முன்பு இவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது.

அதன் காரணமாகவே இவருக்கு தமிழில் தற்போது வாய்ப்புகள் குவிந்து வருவதாக அண்மையில் அவர் கூறினார். வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த படம் வெளிவந்தவுடன் அவரது மார்க்கெட் எதிர்பார்க்காத அளவுக்கு அசுர வளர்ச்சியை எட்டும் என்பது அவரது கருத்தாக இருந்து வருகிறது.

வலிமை படம் இவருக்கு கிடைக்க முக்கிய காரணம் இவர் உடம்பை பிட்டாக வைத்திருப்பதே காரணம் என அவர் கூறினார். கார்த்திகேயா வலிமை திரைப்படம் குறித்து அவ்வப்போது சில தகவல்களை பகிர்ந்து வருகிறார் அப்படி ஒரு பேட்டியில் வலிமை திரைப்படத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

மேலும் தான் கல்யாணம் செய்து கொள்ள புது பெண்ணுக்கு ப்ரொபோஸ் செய்து அசத்தினார் இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் அண்மையில் அவருக்கு திருமணம் முடிந்தது. மணப்பெண்ணுடன் நடிகர் கார்த்திக்கேயா இருக்கும் கல்யாண புகைப்படம் இதோ.

karthikeya
karthikeya