தொட முடியாத உயரத்தில் மார்க் ஆண்டனி.. இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Mark Antony
Mark Antony

Mark Antony : 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமா நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு, உதயநிதியின் மாமன்னன், சிவகார்த்திகேயனின் மாவீரன், ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான்..

ஆகிய படங்கள் வெளிவந்து வசூல் செய்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி.  படத்தில் விஷால் உடன் இணைந்து ரிது வர்மா, சென்ராயன், எஸ் ஜே சூர்யா, ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், அபிநயா என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர்.

படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் படத்தில் ஆக்சன் மற்றும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனால் வசூலிலும் மார்க் ஆண்டனி ருத்ரதாண்டவம் ஆடியது.

முதல் நாளே 10 கொடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் கொஞ்சம் தொட்டது வெறும் 4 நாட்களில் மட்டும் 50 கோடிக்கு மேல் மிரட்டியது. தற்போது  மார்க் ஆண்டனி எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பதை குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் 90 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வெகு விரைவிலேயே 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கபடுகிறது இதனால் படக்குழு சரி, விஷாலும் சரி  செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது. மார்க் ஆண்டனி  100 கோடி வசூல் செய்யும் பட்சத்தில் விஷாலுக்கு முதல் 100 கோடியே தோட்டத் திரைப்படமாக  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.