Mark Antony Box Office Collection: கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்திருக்கும் கேங்ஸ்டர் படமாக மார்க் ஆண்டனி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான மார்க் ஆண்டனி படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வந்தது. மார்க் ஆண்டனி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் விமர்சனங்கள் மற்றும் ட்விட்டர் மூலம் வேற லெவல் மாஸ் மற்றும் நகைச்சுவையுடன் ஒரு பொழுதுபோக்கு படமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
இவ்வாறு இந்த படத்தின் டிரைலர் வெளியான பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உறுதியானது. மேலும் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ரிது வர்மா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, நிழல்கள் ரவி, ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் விஷ்ணு பிரியா காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இந்த படத்தினை எஸ்.ஜே அர்ஜுன் மற்றும் சபரி முத்து இணைந்து எழுதி உள்ளனர். ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுகுட்டி எடிட்டராக பணியாற்றினார். வினோத் குமார் தனது மினி ஸ்டுடியோ பேனரில் படத்தை தயாரித்துள்ளார்.
இவ்வாறு மார்க் ஆண்டனி படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் முதல் நாளின் ரூபாய் 8.35 கோடி என்றும், இரண்டாவது நாளில் ரூபாய் 9.11 கோடி என்றும், மூன்றாவது நாளில் ரூபாய் 13.2 கோடி என்றும் மொத்தமாக மூன்று நாட்களில் ரூபாய் 30.66 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.