நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.. இங்க வந்து விழுந்துட்டேன்.. மார்க் ஆண்டனி… உருக்கமாக பேசிய எஸ் ஜே சூர்யா.!

sj surya
sj surya

Mark antony : விஷால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படத்தில் அபிநயா நிழல்கள் ரவி செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லீ என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகியது ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

மார்க் ஆண்டனி வெற்றி பெற்றுள்ளதால் இதற்கு வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு எஸ் ஜே சூர்யா தன்னுடைய மன வலிகளை கொட்டி தீர்த்துள்ளார். அதில் எஸ் ஜே சூர்யா பேசியதாவது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என் மீது மிகவும் அன்பாக இருப்பார் அடிக்கடி என்னிடம் வந்து கதை சொல்லுவார்.

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களிடம் உங்கள் லெவலுக்கு நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவர் ஆனால் என்னிடம் வந்து கதை சொல்லுகிறீர்கள் இந்த கதை எனக்கு செட்டாகுமா கண்டிப்பா இது செட் ஆகாது என பலமுறை நிராகரித்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னிடம் ஒரு கதை கூறினார். அந்தக் கதை எனக்கு பிடித்து போக நானும் பண்ணலாம் என கூறிவிட்டேன்.

திடீரென ஒரு நாள் வந்து  ஆதிக் ரவிச்சந்திரன் அந்த திரைப்படத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தை பண்ணி விடலாம் என கூறினார் அது மட்டும் இல்லாமல் விஷால் சார்தான் ஹீரோ நீங்களும் பண்ண வேண்டும் என கூறினார். அதற்கு நான் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களிடம் என்ன பண்ண வேண்டும் என கேட்டேன் உடனே ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு கேங்ஸ்டர் பழுத்த பழம் போல் நடிக்க வேண்டும் என கூறினார் இப்பதான் நான் வாழ்க்கையில் போராடி ஒரு இடத்தை பிடித்துள்ளேன் இப்போ போய் கிழவனாக நடிக்க சொல்லுகிறீர்களே என அலட்சியப்படுத்தினேன்.

மாநாடு டப்பிங் சென்று கொண்டிருந்த பொழுது எனிமி வேலை போய்க்கொண்டிருந்தது அப்பொழுது விஷால் சாரை நான் பார்த்தேன் உடனே விஷால் தன்னிடம் சார் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையை கேட்டீர்களா என்று கேட்டார் இல்ல சார் நான் அந்த படத்தை வேண்டாம் என கூறிவிட்டேன் என எஸ் ஜே சூர்யா கூறியதாகவும் நீங்க பஸ்ட் கதையை கேளுங்க பிடிக்கலன்னா அப்படியே விட்டுவிடலாம் என விஷால் சொன்னதாகவும் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனை வர சொல்லி கதையை கேட்டு விட்டு இந்த கதையில் நானே நடிப்பதாக எஸ் ஜே சூர்யா கூறியதாக சமீபத்தில் மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் பேசியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் அப்பொழுது விஷால் சொல்லவில்லை என்றால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை மிஸ் செய்திருப்பேன் என கூறினார் மேலும் அவர் பேசுகையில் ஆதிக் ரவிச்சந்திரன் சார் கதையை சொன்னதும் சூப்பராக இருந்தது விஷாலுக்கு எப்படி அப்பா மகன் போல் காட்டினார்களோ அதே போல் என்னையும் அப்பா மகன் போல் மாற்றுங்கள் என கேட்டேன் உடனே ஆதி திரவச்சந்திரன் வரேன் என்று கூறிவிட்டு சென்றார் பிறகு 20 நாள் கழித்து வந்தார் அவரை அப்படியே கட்டிப்பிடித்து விட்டேன்.

படம் பார்த்த என்னுடைய அக்கா பசங்கள் அனைவரும் அருமையாக இருப்பதாக கூறினார்கள் நான் எப்பொழுதும் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என பல வருடமாக போராடி வந்துகிட்டு இருக்கிறேன் என்னுடைய பயணம் எப்படி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் 2004 இல் நியூ வெளியானது 2005 அன்பே ஆருயிரே ரிலீஸ் ஆனது இரண்டு திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது கோவையில் பெரிய நடிகர்களின் திரைப்படம் ஒன்றை கோடிக்கு விற்ற பொழுது என்னுடைய திரைப்படம் ஒரு கோடிக்கு விற்றது அப்படிப்பட்ட நான் எங்கு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் என்னுடைய தலையெழுத்து எங்கே இருக்கிறேன் அவ்வளவு வலி ஆண்டவன் ஒரேடியாக உச்சத்தில் உட்கார வைத்தது கண்ணை பிடுங்கிண மாதிரி இருந்தது பல வருடமாக செத்து காணாமல் போன என் வாழ்க்கை விரைவில் மீண்டும் தொடங்கியது அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தேன் மார்க் ஆண்டனி மூலம் நல்ல  வரவேற்ப்பு கிடைத்துள்ளது 70% மார்க் ஆண்டனி திரைப்படம் தன்னை திருப்தி படுத்தியது என கூறியுள்ளார்.