“மார்க் ஆண்டனி” இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? அடுத்த டார்கெட் 100 கோடி தான்

Mark Antony
Mark Antony

Mark Antony Movie Collection Report : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ் வினோத் தயாரித்த மார்க் ஆண்டனி திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது.. இந்த படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா இருவரும்..

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து ரிது வர்மா, செல்வராகவன், சுனில் வர்மா, சென்ராயன், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு பிரியா, நிழல்கள் ரவி போன்ற பலரும் நடித்திருக்கின்றனர்.. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாகியது.

மார்க் ஆண்டனி ஒரு ஆக்ஷன் மற்றும் என்டர்டைன்மெண்ட் நிறைந்த படமாகும். இந்த படத்தில் நடிகை விஷ்ணு பிரியா நடிப்பிலும் அழகிலும் அப்படியே சில்க் ஸ்மிதா போல நடித்து நடனம் ஆடி இருப்பார் அந்த காட்சி திரையரங்கில் ரசிகர்களை துல்லலாட்டம் போட வைத்தது.

ஆண்டனி படம்  வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன அதனால் வசூலிலும்  பட்டைய கிளப்புகிறது… இந்த படத்தின் வெற்றியை கூட அண்மையில் ரசிகர்களுடன் படக்குழு கொண்டாடினர்..

இந்த நிலையில் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் இதுவரை மட்டுமே உலகம் முழுவதும் 73 கோடி வசூல் செய்திருக்கிறது.. இது இந்த படத்திற்கு நல்ல ஓபனிங் ஆக இருக்கிறது ஒரு வாரத்திற்கு உள்ளேயே 73 கோடி வசூல் செய்ததால் கூடிய விரைவில் 100 கோடியை தொடக்கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது..