Mark Antony Movie : இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் ஆதிக ரவிச்சந்திரன் பஹீரா படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தை எடுத்தார் பல தடைகளை தாண்டி ஒரு வழியாக செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது.
படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், மீரா கிருஷ்ணன், சென்ராயன் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.மேலும் சில்க் சுமிதா கெட்டப்பில் விஷ்ணு ப்ரியா மிரட்டி இருந்தார். படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தாலும்..
படத்தில் அதிக காமெடி, ஆக்சன் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் படம் சென்றடைந்தது ஆதனால் இப்போது வரை கூட்டம் கூட்டமாக மார்க் ஆண்டனி படத்தை பார்த்து வருகின்றனர் அதனால் படத்தின் வசூலும் குறை வைக்கவில்லை அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
முதல் நாளே 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் வேட்டையாடியது. நேற்று வரை மட்டும் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்த நிலையில் தற்போது 10 நாள் முடிவில் மார்க் ஆண்டனி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி உலகம் முழுவதும் சுமார் 85 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது வெகு விரைவிலேயே 100 கோடியை தொட்டு புதிய சாதனை படைக்கவும் காத்துக் கொண்டிருக்கிறது. அது நடக்கும் பட்சத்தில் நடிகர் விஷாலுக்கு முதல் 100 கோடி திரைப்படமாக மார்க் ஆண்டனி அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.