Mark antony : மதன் பாண்டியன் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா வுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.!

mark antony sj suriya
mark antony sj suriya

Mark antony : ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஆதிக் ரவிச்சந்திரன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பகீரா ஆகிய திரைப்படங்கள் மூலம் தோல்வியை சந்தித்தவர். ஆனால் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனை பார்த்து பெரிய நடிகர்களை வைத்து படத்தை எடு என ஊக்கமளித்துள்ளார்.

அவர் சொன்ன நேரமோ என்னமோ ஆதிக்ராவிச்சந்திரன் மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரிப்பில் 60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக மார்க் ஆண்டனி  திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் செல்வராகவன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, எஸ் ஜே சூர்யா, விஷால் என மிகப்பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருந்தார்.

மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களை பெற்றது மேலும்  4 நாட்களிலேயே கிட்டத்தட்ட 50 கோடி வசூலை நெருங்கியது இந்த நிலவரம் இப்படியே தொடர்ந்தால் விஷாலின் திரை பயணத்தில் முதன் முதலாக 100 கோடி வசூலை வாரி குவித்த திரைப்படம் மார்க் ஆண்டனி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் எஸ் ஜே சூர்யா இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவை பார்க்கவே பல ரசிகர்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் இந்த திரைப்படத்தில் ஜாக்கி பாண்டியன் கேரக்டருக்கு மட்டும் தான் எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் ஆதிக்க ரவிச்சந்திரன்.

மதன்பாண்டியன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அனுராக் கஷயப் நடிக்க வைக்க பிளான் செய்தார் ஆனால் எஸ் ஜே சூர்யா கதையை கேட்டதும் மதன் பாண்டியனாக நானே நடிக்கிறேன் என தன்னுடைய விருப்பத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களிடம் கூறினார் அதேபோல் மதன்பாண்டியன் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து பின்னி பெடல் எடுத்தார் படமும் ஹிட் அடித்தது.

anurag kashyap
anurag kashyap