Mark Antony Director: சமீப காலங்களாக திரைப்படங்கள் எதிர்பார்த்ததைவிட பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டால் அந்த படத்தின் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், போன்றவர்களுக்கு தயாரிப்பாளர்கள் விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவதினை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர்களுக்கு பல கோடி மதிப்புள்ள கார்களை பரிசாக வழங்கினார்.
இதற்கு முன்பு விக்ரம் படத்தின் வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசனும் தன்னுடன் பணியாற்றிய சக நடிகர்களுக்கும், இயக்குனருக்கும் பரிசு வழங்கினார். அப்படி தற்பொழுது விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் திரைப்படம் ரூபாய் 100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு காரை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர்.
லியோ அந்த காட்சி பொய் என கதறிவர்களுக்கு பொருத்தமான வீடியோவை வெளியிட்ட படக் குழு.!
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதில் முக்கிய கேரக்டரில் நடித்த விஷால், எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுமளவில் கவர்ந்தது.
மேலும் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க இப்படத்தினை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்தார். வெளியான ஐந்து நாட்களில் ரூபாய் 50 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது 19 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. சுமார் 35 கோடி பட்ஜெட்டில் உருவான மார்க் ஆண்டனி ரூ.100 கோடி வசூல் செய்ததால் இதனை பட குழுவினர்கள் கொண்டாடினார்.
அந்த வகையில் தயாரிப்பாளர் வினோத் குமார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிஎம்டபள்யூ சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதனை எக்ஸ் தலத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் வினோத் மற்றும் நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.