Mark antony day 1 collection : எஸ் ஜே அர்ஜுன் மற்றும் சவரிமுத்து இணைந்து எழுதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் விஜய் வேலு குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார் வினோத்குமார் தன்னுடைய மினி ஸ்டுடியோ பேனரில் படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்கள்.
செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மார்க் ஆண்டனி திரைப்படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சலிர்ப்பு தட்டாமல் திரைப்படம் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் மார்க் விஷால் ஒரு திறமையான மெக்கானிக் அது மட்டுமில்லாமல் முன்னாள் கேங்ஸ்டர் மகன்.
தன்னுடைய தாயை ஒரு விதியிலிருந்து காப்பாற்றக்கூடிய காலப்பயண தொலைபேசியில் தடுமாற்றம் ஏற்பட்டு தனது குடும்பத்தில் பாரம்பரியத்தை எதிர்கொள்ளும் பொழுது கடந்த காலத்தை மாற்றியமைப்பதால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கிறார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
மேலும் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி ரூபாய் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் கணித்துள்ளார்கள் இதில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளும் அடங்கும் அதே போல் காலை காட்சிகள் கிட்டத்தட்ட 29.74 சதவீதம் பார்வையாளர்களை பிடித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் இன்னும் மூன்று நாள் விடுமுறை நாள் என்பதால் நிச்சயம் மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.