Mark Antony Collection : 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது துணிவு வாரிசு ஜெயிலர் ஜவான் படத்திற்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடி வரும் திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் தான்.
இவர்களுடன் இணைந்து ஒய்.ஜி மகேந்திரன், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, சுனில், நிழல்கள் ரவி, சென்றாயன், மீரா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் படத்தில் நடித்தனர் மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது. படம் முழுக்க முழுக்க ஒரு டைம் டிராவல் படமாக இருந்தாலும்..
ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் சென்றடைந்தது அதனால் மார்க் ஆண்டனி படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து கொண்டாடி வருகின்றனர் வசூல் ரீதியாகவும் வெற்றி நடை கண்டு வருகிறது முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் வேட்டை நடத்தியது. 8 நாள் முடிவில் மட்டுமே 70 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்த நிலையில் 9 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவலும் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி திரைப்படம்..
சுமார் 82 கோடிக்கு மேல் வசூல் பண்ணி உள்ளதாக கூறப்படுகிறது வெகு விரைவிலேயே 100 கோடியை தொட்டு புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. விஷாலுக்கு முதல் 100 கோடியை தொட்ட திரைப்படமாக மார்க் ஆண்டனி மாற இருக்கிறது. புரட்சி விஷால் ரசிகர்கள் இதனை பெரிய அளவில் கொண்டாட இருக்கின்றனர்.