Mark antony : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து ரிது வர்மா, செல்வராகவன் சுனில், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன் விஷ்ணுபிரியா, காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்கள் அதாவது காலத்தை கடந்த ஒரு கதாபாத்திரத்திலும் நிகழ்காலத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. விஷால் ஒரு திறமையான மெக்கானிக் இவர் முன்னாள் கேங்ஸ்டரின் மகனாக நடித்திருந்தார்.
அதாவது தான் பிரிந்த தாயை ஒரு பயங்கர ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக காலப்பயணத்தை மேற்கொள்வார். காலத்தை மாற்றி அமைப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகளை எப்படி கையாளுகிறார்கள் என்பது தான் கதை அதன் பிறகு நடக்கும் சம்பவமே மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முழு கதை .
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது அதனால் இந்தியா முழுவதும் முதல் நாளிலேயே நான்கு கோடி ரூபாய் வசூலிக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் மதிப்பிட்டதை விட அதிகமாக வசூல் வேட்டை நடத்தியது இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் 7.75 கோடி வசூல் வேட்டை நடத்தியது இந்த நிலையில் முதல் நாள் 8.5 கோடியும், இரண்டாவது நாள் 9.4 கோடியும், மூன்றாவது நாள் 10.4 கோடியும், நான்காவது நாள் 7.85 கோடியும், ஐந்தாவது நாள் 4.2 கோடியும் ,ஆறாவது நாள் 3.2 கோடியும், ஏழாவது நாள் 2.93 கோடியும், எட்டாவது நாள் 2.48 கோடியும் வசூல் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ஆக மொத்தம் எட்டு நாள் முடிவில் 48.96 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.