ஜெட் வேகத்தில் “மார்க் ஆண்டனி” 6 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Mark Antony

Mark Antony : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இவர் முதலில் திரிஷா இல்லனா நயன்தாரா என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த AAA மற்றும் பஹீரா  போன்ற படங்கள் வெளிவந்து சுமாராகவே ஓடின. ஆனால் தான் இயக்குவதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.. விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யாவிடம் மார்க் ஆண்டனி  கதை சொல்லி ஓகே செய்தார். ஒரு வழியாக படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி கோலாகலமாக செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது.

படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் ஒரு படமாக இருந்தாலும் படத்தில் காமெடி, ஆக்சன் என அனைத்தும் இருந்ததால் படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் சென்றடைந்தது. அதனால் கூட்டம் கூட்டமாக இருந்த படத்தை பார்த்து வருகின்றனர் படத்தில் விஷால் நடிப்பு ஓகேவாக இருந்தாலும் தூக்கி நிப்பாட்டியது.

என்னவோ எஸ் ஜே சூர்யா தான் ஆம் அவருடைய வில்லத்தனம், காமெடி என அனைத்தும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதனால் படம் வெற்றி நடை போட்டு வருகிறது.  மார்க் ஆண்டனி படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

Mark Antony
Mark Antony

ஏற்கனவே 50 கோடியை வசூலித்த இருந்த நிலையில் 6  நாள் முடிவில் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி இதுவரை 66 கோடிக்கு மேல் வசூல் வசூல் செய்துள்ளது. நிச்சயம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என  பலரும் அடித்து கூறுகின்றனர்.