வசூல் மழையில் “மார்க் ஆண்டனி” 4 நாட்கள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

mark antony

Mark Antony 4 day collection : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஓடி கொண்டிருப்பவர்  ஆதிக் ரவிச்சந்திரன் முதலில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்னும் படத்தை  இயக்கி அறிமுகமானார் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து உடனே சிம்புவை வைத்து AAA என்னும் படத்தை எடுத்தார்.

ஆனால் இந்த படத்தின் போது சிம்பு குறுக்கிட்டு கதையில் மாற்றம் செய்ததால் இந்த படம் தோல்வியடைந்ததாக பேச்சுக்கள் எழுந்தன அதன் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் அப்பொழுது அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பல அறிவுரைகளை சொன்னார். அதை செய்ததால் வெற்றிகளை அள்ளி வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு பிரபு தேவா வைத்து பஹீரா என்னும் உருவாக்கினார் ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் பெரிய அளவில் ஓடவில்லை.  அடுத்து மிக பிரம்மாண்ட பொருட்ச அளவில் எஸ் ஜே சூர்யா, விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படம் எடுத்தார்.

படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகியது படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் மிரட்டலாக இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தனர் படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது ஆம் படம்  ஆக்சன் காமெடி சென்டிமென்ட் கலந்த படமாக இருந்து வந்துள்ளது.

mark antony
mark antony

தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை மட்டுமே பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது 4 நாட்கள் முடிவில் மட்டுமே சுமார் 52 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.  வருகின்ற நாட்களிலும் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் குறையாது என கருதப்படுகிறது.