Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அப்படி எதிர்நீச்சல் சீரியலுக்கு இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரன் கேரக்டர் தான்.
ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மாரிமுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு பாடி, லாங்குவேஜ் போன்றவை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கும் நிலையில் மிகவும் கெத்தாக திரிந்து வந்த குணசேகரன் தற்போது ஜகார்த்தனனால் பல அவமானங்களை சந்தித்து வருகிறார்.
இவர் இதற்கு முன்பு ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அப்படி எதிர்நீச்சல் சீரியலுக்கு முன்பு யுத்தம் செய், பரியேறும் பெருமாள், மருது, கூட்டத்தில் ஒருவன், சுல்தான் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் கண்ணும் கண்ணும், புலிவால் எனப் போன்ற இரண்டு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வில்லனாக அறிமுகமான இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதாவது இவரை வைத்து ஏராளமான மீம்ஸ்களும், வசனங்களும் வைரலாவது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு தற்போது இந்த அளவிற்கு பிரபலமாக இருக்கும் மாரிமுத்து தனது வாழ்க்கையில் 33 வருடங்கள் கஷ்டப்பட்டதுக்கும் பிறகுதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.
சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டங்களில் 1500 ரூபாய் சம்பளத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அப்படி மணிரத்தினம், வசந்த், எஸ்.ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இதன் மூலம் பலவற்றை கத்துக்கொண்ட மாரிமுத்து சிம்புவை வைத்து மன்மதன் திரைப்படத்தினை இயக்கினார்.
முதலில் மாரிமுத்து பிரபுதேவாவை வைத்து தான் தனது முதல் படத்தினை இயக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய 10 நாட்களில் இந்த படம் நின்று விட்டதாம் அதன் பிறகு பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தினைக் இருக்கிறார். ஆனால் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
பிறகு முழு காமெடி படமாக வடிவேலுவை வைத்து கத்தி முனையில் கருப்பு சிங்காரம் என்ற படத்தினை இயக்கி வந்துள்ளார். ஆனால் தயாரிப்பாளருக்கும் வடிவேலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் இந்த படமும் கைவிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் மாரிமுத்துவிற்கு யுத்தம் செய் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறு தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு ரூபாய் 1.5 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.