Actor Marimuthu: இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். இந்நிலையில் அவருடைய நினைவுகளை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து வரும் நிலையில் அவர் பேசிய கடைசி வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
வசந்த், மணிரத்தினம், எஸ்.ஜே சூர்யா போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த இரண்டு திரைப்படங்களும் சுமாரான வெற்றினை பெற்ற காரணத்தினால் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி தற்பொழுது வரையிலும் 20 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் கமலஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் பிரபலமடைந்து இருக்கு மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தான் நடித்து வந்தார்.
இந்த சீரியல் தான் இவருக்கு பேரையும், புகழையும் பெற்று தந்தது. ஆதி குணசேகரனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவ்வாறு இதன் மூலம் பிரபலமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் இவர் கடைசியாக பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் எதிர்நீச்சல் சீரியல் குணசேகரின் மகள் தர்ஷினி கேரக்டரின் நடித்து வரும் மோனிஷாவின் சகோதரிக்கு மாரிமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா.. நான் மோனிஷாவுக்கு அப்பா என்றால் உனக்கும் அப்பாதான்.. என்னுடைய மகள் ஐஸ்வர்யாவை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்த மாதிரியே உங்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும். நீங்கள் இருவரும் அதிக அளவில் உங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வர வேண்டும் நீங்கள் இருவரும் பல போட்டிகளில் கலந்துகொண்டு இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன் அதேபோல் இன்னும் பல போட்டிகளில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் அதிகமான வெற்றியினை பெற வேண்டும் உனக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாக இருக்கு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதனால் நீ அதிகமான வெளிநாட்டுக்கு சென்று உன்னுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். குத்து சண்டை, வாள்வீச்சு என்ற பல துறைகளிலும் நீயும் மோனிஷாவும் சிறந்து விளங்குகிறிர்கள். இனிவரும் எதிர்காலத்தில் உங்கள் துறையில் அதிக சாதனங்களை பெற வேண்டும், நீ சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டு போன பிறகுதான் உன்னை பத்தி நிறைய பெருமையாக பேசிக்கொண்டே இருந்தேன். இந்த சின்ன வயதில் எவ்வளவு தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதை பார்த்து எனக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த உலகமே உன்னுடைய திறமையை கொண்டாட வேண்டும். அதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்று அந்த வீடியோவில் மாரிமுத்து பேசியுள்ளார்.